மேலும், காவிரி நீர் விவகாரம் மற்றும் மாநிலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பெங்களூருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லமான “கிருஷ்ணா’வில் ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில், காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவக்குமார் ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யைச் சந்திப்பதாக இருந்தது.
இதற்கிடையில், தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதாக கர்நாடகா தரப்பிலிருந்து கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், “தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களை வேறொரு தேதியில் சந்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சூழல் சுமுகமாக இருக்க வேண்டும். நாம் யாருக்கும் மனவேதனை அளிக்கக் கூடாது. ஒரு விருந்தினர் வரும்போது, அவரை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும். ஆகஸ்ட் 3-ம் தேதி விஜய் வருவதற்கான ஏற்பாடுகளை அரசு ஏற்கெனவே செய்திருந்தாலும், அவரது வருகையை ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.