பின்னணி பாடகி ஜானகியின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “பெருமதிப்பிற்குரிய ஜானகி அம்மாவின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக எனக்கு இருந்தது.
தன்னுடைய சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களை, தாங்க முடியாத துக்கங்களைத் தாங்கி அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.