“மேடையில் விஜய்க்கு உரிய மரியாதையை பெற்றுத் தந்தது இந்த முரசொலி மாறன் மகன்தானே?” – தயாநிதி மாறன் | “Wasn’t it this son of Murasoli Maran who secured the respect due to Vijay on stage?” – Dayanidhi Maran

Spread the love

இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-ல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், திரு.விஜய் அவர்கள் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.விஜய் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, திரு.விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?

முரசொலி மாறன், கருணாநிதி

முரசொலி மாறன், கருணாநிதி

அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *