ஜிலேபி முதல் ரசம் சாதம் வரை! – நடுத்தர வர்க்க இளைஞனின் மாஸ்டர்செஃப் கனவைச் சொல்லும் 'ரிசார்ட்'

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பெரிய ரிசார்ட் ஒன்றில் ரூம் சர்வீஸ் வேலை செய்யும் கதாநாயகன் வெற்றி (விஜய்) சமையல் கலையின் மீது தீராத காதல் கொண்டவர். பல சிரமங்களுக்கும், சவால்களுக்கும் இடையில் தன் லட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே கதை

நடுத்தர வர்க்க இளைஞனின் மாஸ்டர்செஃப் லட்சிய போராட்டத்தை விவரிக்கும் ஒரு எளிய மிகச் சிறந்த பீல் குட் குடும்ப பொழுதுபோக்கு தொடர் தான் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரிசார்ட் வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில்…

சீனியர் செஃப் நெடுமாறன்

சமையலறையின் சர்வாதிகாரி

கண்டிப்பு அதிகாரத்தோடு வலம் வரும் கதாபாத்திரம் .

வெற்றியின் திறமைக்கு முட்டுக்கட்டைப் போடும் அதே நேரத்தில் ஒரு சீனியர் செஃப்பாக இவரது கம்பீரமான நடிப்பு தொடருக்கு விறுவிறுப்பை தருகிறது.

ஹாட் ஜிலேபி போல் செம கிறிஸ்ப்…

ரிசார்ட் ஓனர் ரகுபதி

நெடுமாறனின் ஆதிக்கத்திற்கு மத்தியில், வெற்றியின் நியாயமான பக்கத்தை உணர்ந்து கதையை ஸ்மூத்தாக கொண்டு போகும் கதாபாத்திரம்.

வெற்றியின் தவறுகளை மன்னித்து அவனுக்கு வாய்ப்புகளை தரும் இவரது பக்குவப்பட்ட குணம் .. நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறது.

பிரவீன் பென்னட்

ரசமலாய் போல் மென்மையாக…

கதையின் சுவாரசியத்தை அதிகரிக்கும் மற்றொரு நபர் மேனேஜர் ராஜன். அவரின் மென்மையான அலட்டிக் கொள்ளாத நடிப்பு …அவரின் சிறு வயது காதல் போலவே அழகு.

பாதுஷா போல் மிதமான இனிப்பு.

ஐஷுவின் இயல்பான க்யூட்டான நடிப்பு.. சூப்பர் .தன்னுடைய ஆர்வம்… அப்பாவின் கண்டிப்பு… விருப்பமே இல்லாமல் சமையல் போட்டியில் கலந்து கொள்வது என உணவுகளுடன் தொடர்புடைய நினைவுகள் மற்றும் உணர்வுகளை மிக அழகாக தன் கண்களாகவே கடத்துகிறார்.

உணர்தலில் தானே

எல்லாம் இருக்கிறது

காற்று

கடவுள்

காதல் உட்பட…

ஐஷுவின் கதாபாத்திரம்

பாசந்திபோல் செம டேஸ்ட்

சீனியர் ரூம் சர்வீஸ் பாண்டியின் நகைச்சுவை

உத்தமன் படவா கோபியின் தேர்ந்த நடிப்பு டைமிங் காமெடி…

பவானி அக்காவின் கடை

அக்கா மகள் ரம்யாவின் ஒரு தலை காதல் (சாதாரண பவானி அக்காவின் மகள் ரம்யா மதிப்புமிக்க ரிசார்ட்டின் சமையலறைக்குள் நுழையும் காட்சிகள் கவிதை. )

ஜில்லுனு குல்பி சாப்பிட்ட திருப்தி .

ஜோஜூ–ரசம் சாதம் … இளவயது காதல்.. சேமியா கீரில் நெய்யில் வறுத்த முந்திரி போல!சூப்பர்

ஜோஜூ… வெற்றியின் சமையல் திறமையை பாராட்டி ரசம் குடிக்கும் காட்சியைத் தொடர்ந்து தான் வெற்றியின் சமையலறை பயணம் அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கும்.

வெற்றியின் ரசம் இப்பொழுது நிறைய பேர் வீட்டில்… ரொம்ப எளிமையான அதேசமயம் காதலாய். கமகமன்னு காரசாரமாய் ரசம்.

விக்கி வேணி எமோஷனல் மற்றும் காதல் கதை களத்துக்கு பொறுப்பு… சூடான கேரட் அல்வா ஹாட் குலோப்ஜாமூன் காம்பினேஷன்.

இரண்டு முறை மாஸ்டர் செஃப் பட்டம் வென்ற ராஜதுரை ( குமரவேல்)

மிக முக்கியமான கதாபாத்திரம் . வெற்றிக்கு வழிகாட்டி .

(எனக்கு மிகவும் பிடித்த என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம்)

அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் கத்தி போல் கூர்மை. அவர் ஒவ்வொரு முறையும் வெற்றியின் பின்னந்தலையை அடித்து பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி… ரொம்ப அழகா இருந்தது. அவரின் காஸ்டியூம் செம… அதுமட்டுமில்லாமல் அவரின் எமோஷனல் பக்கம் ஒரு அழகான எபிசோட்.. அதுவும் அந்த வாக்கி டாக்கி… (டைரக்டரின் டச் )

வெற்றிக்கும் இவருக்குமான உறவு துரோணாச்சாரியார் ஏகலைவன் பந்தம். சமையலின் நுணுக்கங்கள் சவால்களை எதிர்கொள்ள அளிக்கும் பயிற்சிகள் என குமரவேலின் கதாபாத்திரம் தொடருக்கு மிகப்பெரிய பிளஸ்

ஒரு சாதாரண சமையல் மேல் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞனை மாஸ்டர் செஃப்பாக மாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும்…

இப்படி ஒருவர் நம்முடன் இருந்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில்

நாம் நினைத்ததை அடையலாம் என உணர்த்தியது.

குறிப்பாக நடுக்கடலில் எந்தப் பொருளும் இன்றி சமைக்கச் சொன்ன அந்த சர்வைவல் சமையல் சவால் சீன் வேற லெவல்.

ஒரு சிறந்த சமையல் செய்பவருக்கு விலை உயர்ந்த பொருட்கள் தேவையில்லை. இருக்கும் எளிய பொருட்களை வைத்து சுவையான உணவை உருவாக்க முடியும் என்று தத்துவத்தை … தொடரை பார்ப்பவர்களுக்கு இந்த சவால் உணர்த்தியது.

குறிப்பாக நடுக்கடலில் எந்தப் பொருளும் இன்றி சமைக்கச் சொன்ன அந்த சர்வைவல் சமையல் சவால் சீன் வேற லெவல்.

ஒரு சிறந்த சமையல் செய்பவருக்கு விலை உயர்ந்த பொருட்கள் தேவையில்லை. இருக்கும் எளிய பொருட்களை வைத்து சுவையான உணவை உருவாக்க முடியும் என்று தத்துவத்தை … தொடரை பார்ப்பவர்களுக்கு இந்த சவால் உணர்த்தியது.

இனிப்பு கடையில் இருக்கும் எல்லா இனிப்புகளுமாய்… இரண்டு முறை பட்டம் என்ற மாஸ்டர் செஃப் ராஜதுரை.

ஸ்டார் செஃப்இறுதிப்போட்டியில் நடுவர்களை அசத்தும் எமோஷனல் தருணம் தொடரின் உச்சகட்டம் .

தனது சீடன் மேடையில் நிற்பதைக் கண்டு குமரவேலின் முகத்தில் தெரிந்த அந்த பெருமிதம் அந்த காட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இறுதியாக வெற்றி… என்ற கதாபாத்திரத்தில் எரும சாணி youtube புகழ் விஜயகுமார்… அவரை என்னச் சொல்லிப் பாராட்டுவது… தெரியவில்லை வெற்றியாகவே மாறி நம்மை அவருடனே பயணிக்க வைத்து விட்டார்

ரூம் சர்வீஸ் வேலை செய்து கொண்டே தான் ஒரு மாஸ்டர் செஃப்பாக ஆக வேண்டும் என்று லட்சிய கனவைநோக்கி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ,அவர் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வை பார்ப்பவர்களுக்கு கடத்திவிடுகிறார். அருமையான நடிப்பு .

வாழ்த்துகள் விஜய்.

… முக்கியமான இருவரைப் பற்றி பாராட்டியே ஆக வேண்டும் அவர்கள் தான் ரஷாந்த் அர்வின் மற்றும் அருண் ராஜ்.

இவர்களின் உத்வேகம் அளிக்கும் மென்மையான பின்னணி இசை எமோஷனல் காட்சிகளுக்கு தனி உயிர் கொடுக்கிறது கதையின் உணர்வுகளை மிக அழகாக கடத்தி…

குறிப்பாக செஃப் ராஜதுரை ,வெற்றி கதாபாத்திரத்தில் பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு உணர்வுகளை தூண்டும் வகையில் படு நேர்த்தி.

தொடருக்கு பின்னணிஇசை

மிகப் பெரிய பிளஸ்.

பிரவீன் பென்னெட்டின் இயக்கம். வழக்கமான காதல் ,திரில்லர் என்று இல்லாமல் குக்கரி டிராமா பின்னணியில் அழகான நகைச்சுவையுடன் ரிசார்ட் வெப் சீரிஸ் எடுத்த பிரவீன் பென்னட்டின் இயக்கம் திருப்பதிலட்டுப்போல… முந்திரி கிராம்பு பச்சை கற்பூரம் ஏலம் மணக்க மணக்க தெய்வீகமாய் இருந்தது.

எந்த வகை இனிப்புக்கும் மிகச்சரியாக சர்க்கரையின் அளவு அமைந்தால்தான் அந்த இனிப்பு ஜோரா இருக்கும். அப்படி இருந்தது பிரவீன் இயக்கம்

மொத்தத்தில்

சூப்பர் செஃப் நெடுமாறனின்

அதிகாரப் போக்கு

ரகுபதியின் பக்குவம்

வெற்றியின் விடாமுயற்சி

ராஜதுரையின் பக்குவப்பட்ட வழிகாட்டல்

நடுக்கடலில் சமையல் சவால்…. ரிசார்ட் வெப்சீரிஸை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி விட்டது.

ரிசார்ட் 2… ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வாருங்கள் பிரவீன்…

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *