> கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் ரூ.2,500 ஆகவும், தட்கல் பாஸ்போர்ட் ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழு விலை பட்டியலையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
> ITR-1 மற்றும் ITR 2-க்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி வருகிற ஜூலை 31-ம் தேதி.
இந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், எந்த அபராதமும் இருக்காது.

> வங்கிகள் தவறான வாக்குறுதிகளை அளித்து நிதி சார்ந்த திட்டங்கள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதைத் (Mis-selling) தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் படி, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திருப்பித் தரப்படுவதோடு, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும்.
இதுவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.