ஜூ.வி மெகா சர்வே: `இழுபறியில் ரகுபதி; டஃப் கொடுக்கும் அதிமுக'- மத்திய மண்டல மாவட்டங்களின் நிலவரம்!

Spread the love

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் 2026
சட்டமன்றத் தேர்தல் 2026

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.

திருமயம் தொகுதி

திருமயம் தொகுதி தி.மு.க-வில் எஸ்.ரகுபதி, அ.தி.மு.க-வில் பி.கே.வைரமுத்து, நா.த.க-வில் லட்சுமி சீனிவாசன், த.வெ.க-வில் சிந்தாமணி போட்டியிடுகிறார்கள். தொகுதிக்குப் பெரிதாகத் திட்டங்களைக் கொண்டுவரவில்லை, எளிமையாக அணுக முடிவதில்லை என்பது ரகுபதிக்கு மைனஸ்.

திருமயம்
திருமயம்

முத்தரையர் சங்க பிரமுகர் கே.கே.செல்வக்குமார் இப்போது தி.மு.க கூட்டணியில் இருப்பது ப்ளஸ். வைரமுத்துவுக்கு அ.ம.மு.க கூட்டணியில் இணைந்திருப்பது பலம். சிந்தாமணி பிரிக்கும் கணிசமான வாக்குகளால் ரகுபதிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே இழுபறி நிலை நீடிக்கிறது.

இவர்கள் தவிர புதுக்கோட்டை – திண்டுக்கல் – கரூர் – திருச்சி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் விராலிமலையில் சி.விஜயபாஸ்கர், ஆலங்குடியில் சிவ.வீ.மெய்யநாதன், அறந்தாங்கி தொகுதியில் டி.ராமச்சந்திரன், அமைச்சர் சக்கரபாணி, ஐ.பெரியசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.என்.நேரு, த.வெ.க-வில் விஜய், அன்பில் மகேஸ், லீமா ரோஸ் எனப் பல முக்கிய நிர்வாகிகள் தேர்தலை சந்திக்கின்றனர்.

இவர்கள் பங்குபெறும் இந்த சட்டமன்றத் தேர்தலின் முழு கள நிலவரத்தை அறிய க்ளிக் செய்யுங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *