ஜெய்ஸ்வால் டிரேட்.. லக்னோ, கேகேஆர் அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி? தலைவனின் தரமான முடிவு! | Yashasvi Jaiswal trade might not happen for KKR and LSG due to IPL Mega Auction 2028

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை டிரேட் மூலமாக வாங்குவதற்கு லக்னோ மற்றும் கேகேஆர் அணிகள் முயற்சித்து வருகின்றன. ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன்சி ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதால், அவரும் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் ராஜஸ்தான் நிர்வாகம் காத்திருந்து இறுதி முடிவை எடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீண்ட நாட்களாகவே கேப்டன்சி செய்ய விருப்பம் காட்டி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்ட போதும், ஜெய்ஸ்வாலுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை. ஏற்கனவே ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணியின் கேப்டனாக ஜெய்ஸ்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Yashasvi Jaiswal

ஆனால் கடைசி நேரத்தில் மும்பை கிரிக்கெட் நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நகர்வை தடுத்தனர். இதனால் ஐபிஎல் தொடரில் கேப்டனாக அடுத்த உயரத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஜெய்ஸ்வாலின் எண்ணமாக உள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன்சிக்கு ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் போட்டி போட்டதால் தான், சஞ்சு சாம்சனும் அங்கிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்தார்.

தற்போது ரியான் பராக் கேப்டனாக இருக்கும் சூழலில், வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறலாமா என்று ஜெய்ஸ்வால் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் டிரேட் செய்வதற்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

லக்னோ மற்றும் கேகேஆர் அணிகள் ஜெய்ஸ்வாலை டிரேட் மூலம் வாங்க முயற்சித்து வருகின்றன. ஆனால் ராஜஸ்தான் அணியின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அடுத்த சீசன் முடிவடைந்த பின், மெகா ஏலம் வந்துவிடும். ஜெய்ஸ்வால் மெகா ஏலத்தில் பங்கேற்றால், அவர் குறைந்தபட்சம் ரூ.25 கோடி வரை ஏலம் போகக் கூடும்.

அடுத்த சீசனில் புதிய கேப்டனை தேடும் அணிகளால் நிச்சயம் ஜெய்ஸ்வால் குறி வைக்கப்படுவார். இதனால் ஜெய்ஸ்வால் ஒரு சீசன் ராஜஸ்தான் அணியில் விளையாடிவிட்டு, மெகா ஏலத்தில் பங்கேற்கும் முடிவுக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக ஜெய்ஸ்வால் டிரேட் கடைசி வரை நடக்காமல் செல்லவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *