ஜெர்மனியை வீழ்த்தி மாஸ் காட்டிய இந்தியா… உலகக்கோப்பையில் 5-வது இடம்! – Kumudam

Spread the love

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வாக்னர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5 வது இடத்திற்கான போட்டியில், உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய அணியும், 5 வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணியும் மோதிக்கொண்டது.

முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் 43 வது நிமிடத்தில் இஷிகா சவுத்ரி கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலையை பெற்றுத் தந்தார். இதனைத் தொடர்ந்து நவ்னீத் கவுர் 44 வது நிமிடத்தில் ஒரு கோலும், 47 நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து  3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா, போட்டி முடிவடையும் நேரத்தில் ஜெர்மனியின் லின் கிரிங்ஸ் 59 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இருப்பினும் அதன் பிறகு இந்திய அணியின் தடுப்பாட்டத்தை ஜெர்மனியால் உடைக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றி இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு வரலாற்று சிறப்பமிக்கதாகவும் அமைந்துள்ளது.

மேலும் 1974-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி 4-வது இடம் பிடித்திருந்தது. அதன்பிறகு தற்போது முதல்முறையாக இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையில் டாப் 5-க்குள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரூ.50 லட்சம் பரிசு

உலகக் கோப்பையில் 5 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்த இந்திய பெண்கள் ஆக்கி அணியை பாராட்டும் வகையில்,ஆக்கி இந்தியா சார்பில் ரூ 50 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *