ஜோக்ஸ்… – கட்சி ஆஃபீஸ்!

Spread the love

Since 1926

“தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?”

“ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!”

– எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்..!

“தலைவர் பல கட்சிகளைப் பார்த்தவருன்னு எதைவெச்சு சொல்றே?”

“அவரோட வீட்டில் இருக்குற சூட்கேஸுகளை வெச்சுதான்!”

– மூ.மோகன்

“கட்சி ஆபீஸ் முன்னாடி, ‘இங்கு எல்லா அட்ரஸுக்கும் வழிகாட்டப்படும்’னு போர்டு வெச்சிருக்கீங்களே, ஏன் தலைவரே?”

“வழி கேட்கவாவது ஆட்களை உள்ளே வரவழைக்கலாம்னுதான்யா!”

– வி.நர்மதா

“கூட்டணியில் இணைந்துவிட்டதால், முன்பு இந்தத் தலைமையைக் கண்டபடி திட்டி நாங்கள் பேசிய வீடியோக்களையெல்லாம், தயவுசெய்து AI வீடியோக்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் மக்களே!’’

– திருப்பூர் சாரதி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *