“தலைவர் இன்னமும் சட்டமன்ற ஞாபகத்துலயே இருக்காருன்னு எதை வச்சுச் சொல்றீங்க?”
“நிருபர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பாட்டுப் பாடுறாரே!”
– குரு ஷங்கர்
“நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழலை வேரோடு அறுப்போம்!”
“முதல்ல அந்த வேருக்கு உங்க கட்சியிலருந்து தண்ணி ஊத்துறதை நிறுத்துங்க தலைவரே!”
– ஆதவன்
“தலைவர் ஏன் வீட்டு முன்னாடி குதிரை சிலை வெச்சிருக்காரு?”
– டி.சிவக்குமார்
“படையிலிருக்கும் குதிரைகளையெல்லாம் உடனடியாக மாற்ற வேண்டுமென மன்னர் ஏன் அடம்பிடிக்கிறார்?”
“கடைசியாக நடைபெற்ற போரில் அவருக்குப் பின்னர்தான் குதிரைகளெல்லாம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனவாம்!”
– ரகுநாத்.வ