2018 : * பயனர்களின் ரகசியக் குறியாக்க விசைகளை (Encryption keys) அரசிடம் தர பாவெல் துரோவ் மறுத்ததால், சொந்த நாடான ரஷ்யாவிலேயே டெலிகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது.
* சமூக வலைதளங்களில் தணிக்கை (Censorship) அதிகரித்ததால், பைரசி கும்பல்கள் தங்கள் தளத்தை டெலிகிராமுக்கு மொத்தமாக மாற்றத் தொடங்கினர். தரமான ‘HD’ கோப்புகளை எளிதில் பகிரும் வசதி இதற்குத் துணையாக இருந்தது.
2020: * டெலிகிராம் 40 கோடி பயனர்களைத் தாண்டியது. வீடியோ அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டெலிகிராமை முடக்க முடியாததால், ரஷ்யா தனது தடையை அதிகாரபூர்வமாக விலக்கிக் கொண்டது.
* கொரோனா ஊரடங்கினால் ஓடிடி தளங்களின் வரவு அதிகரித்தது. திரையரங்குகளுக்குப் பதிலாக இணையத்தில் வெளியான படங்கள், வெளியான சில நிமிடங்களிலேயே டெலிகிராமில் லீக் ஆவது வாடிக்கையானது.
2021: வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை (Privacy Policy) அறிவித்ததால் அதிருப்தியடைந்த பலரும் டெலிகிராம் பக்கம் நகர்ந்தனர். பயனர்கள் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்தது.

2022: * ரஷ்யா – உக்ரைன் போரின் போது, இரு நாட்டு மக்களும் அரசுகளும் நிகழ்நேர செய்திகளைப் பகிர்ந்துகொள்ள டெலிகிராமே முக்கியத் தளமாக விளங்கியது. இதே ஆண்டில் ‘டெலிகிராம் பிரீமியம்’ வசதி அறிமுகமானது.
* இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அமெரிக்காவின் ஹாலிவுட் நிறுவனங்கள், டெலிகிராம் நிறுவனத்திடம் பயனர் தரவுகளைத் தரக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தன.
2024: * சட்டவிரோத நடவடிக்கைகள், போதைப்பொருள் விற்பனை, மோசடிகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
* பல்வேறு நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் சினிமா அமைப்புகளின் புகாரைத் தொடர்ந்து, டெலிகிராம் நிறுவனம் தனது ‘Report’ பொத்தானை மேம்படுத்தி, காப்புரிமை மீறல் சேனல்களை நீக்கும் பணியைத் தொடங்கியது.
2026: நீட் (NEET) மறுதேர்வு வினாத்தாள் மோசடிகளைத் தடுக்க, இந்திய அரசு ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை விதித்தது.