NEET பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது நாங்கள்தான்.
நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, திமுக ஆரம்பத்திலிருந்தே அதை எதிர்த்து வருகிறது.
தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்.
மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.