‘ட்விலைட்’ வாம்பயர் இனி ‘007’ உளவாளி! `ஜேம்ஸ் பாண்ட்’ ஆகும் ராபர்ட் பாட்டின்சன் யார் தெரியுமா? | Robert Pattinson Is the New James Bond: Who Is the Next 007?

Spread the love

 2005-ஆம் ஆண்டு வெளியான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லெட் ஆப் ஃபயர்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் ‘செட்ரிக் டிஜிகோரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

Robert Pattinson

Robert Pattinson
KIRSTY WIGGLESWORTH

இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.

உலகப் புகழைக் கொடுத்த ‘ட்விலைட்’ திரைப்படம்:

2008-ஆம் ஆண்டு வெளியான ‘ட்விலைட்’ திரைப்படம் ராபர்ட் பாட்டின்சனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இதில் எட்வர்ட் கல்லன் என்ற வாம்பயர் கதாபாத்திரத்தில் நடித்தார். கிறிஸ்டின் ஸ்டேவார்ட் உடன் இணைந்து நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

Robert Pattinson

Robert Pattinson
Chris Pizzello

தொடர்ந்து வெளியான ட்விலைட் திரைப்படத் தொடர்களான ட்விலைட் (2008), நியூ மூன் (2009), எகிளிப்ஸ் (2010), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-1(2011), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-2(2012) போன்ற திரைப்படங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

எகிளிப்ஸ் (2010), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-1(2011), பிரேக்கிங் டவ்ன் பார்ட்-2(2012) போன்ற திரைப்படங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த ராபர்ட்:

 ட்விலைட் திரைப்படத் தொடர் மூலம் காதல் நாயகனாக அடையாளம் காணப்பட்டாலும், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை.அதன் காரணமாக குட் டைம் (2017), ஹை லைப் (2018), தி லைட்ஹவுஸ் (2019), டெனட் (2020) போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தார்.குறிப்பாக ‘கிறிஸ்டோபர் நோலன்’ இயக்கிய ‘டெனட்’ திரைப்படத்தில் நீல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *