விரைவில் திமுக ஆட்சி” – ஸ்டாலினின் பேச்சுக்கு அமைச்சர் அருண்ராஜ் எதிர்ப்பு |”An admission to horse-trading” – Arunraj’s response to Stalin’s claim that “a DMK government will come to power soon.

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமணவிழாவை நேற்று நடத்தி வைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசி இருந்தார்.

மு.க. ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், “”விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது’ என்று பகிரங்கமாகப் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமணவிழா

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமணவிழா

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

“திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்!

”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளைப் பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *