இதுவே கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வரி கட்டவேண்டும்?
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது குறைந்த காலம் என்பது இரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, நீங்கள் செய்த முதலீட்டை 24 மாதங்களுக்குள் திரும்பப் பெறும்போது கிடைக்கும் லாபம் உங்கள் ஆண்டு வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்கு எத்தனை சதவிகிதம் வரி கட்டவேண்டுமோ அந்தளவுக்கு வரி கட்ட வேண்டும்.
ஆனால், இரண்டு ஆண்டு மேற்பட்டு முதலீட்டை விற்கும்போது 12.5% மட்டும் வரி கட்டினால் போதும். ஆக, கோல்டு இடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பணத்தைத் திரும்ப எடுத்தால், அதிகளவில் வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்!
இனி கோல்டு இ.டி.எஃப் திட்டத்திலும், கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்யும்போது அதிக வரி கட்டாமல் இருக்க நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள்!