தங்கம் வாங்க வேண்டாமா? எதில் முதலீடு செய்யலாம்?|From Gold ETFs to Stocks: Smart Investment Ideas After Modi’s Appeal

Spread the love

“அடுத்த ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீர்கள். அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும்’ என்று மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.

> தங்கத்தைப் பிசிக்கலாக தான் வாங்க வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறார் மோடி. மற்றப்படி, கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம். ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள் அந்த முதலீட்டைத் தொடரலாம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

> சில நாள்களாக, வெள்ளி விலை நல்ல ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதனால், வெள்ளி இ.டி.எஃப்பிலும் முதலீடு செய்யலாம்.

> தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டிகளைப் பொறுத்த வரை, எப்போதுமே லம்சம் முதலீட்டை விட, எஸ்.ஐ.பி முறை தான் சிறந்தது. அதனால், வாரம் வாரமோ, மாதம் மாதமோ குறிப்பிட்ட தொகையை நிலையாக கோல்டு மற்றும் சில்வர் இ.டி.எஃப்பில் முதலீடு செய்துவரலாம்.

> ஈரான் போர் பெரும்பாலான உலக சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்து உள்ளன. இதை பயன்படுத்தி பல முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடுகளை செய்து வருகின்றனர். இதே ஸ்ட்ரேட்டஜியை நாமும் தொடங்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *