கடந்த வாரம் சரியாக இதே நாளில், அதாவது சனிக்கிழமை (அக்டோபர் 31) சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.01 லட்சத்திற்குச் சென்றது.
‘அட… தீபாவளியும் வருது. தங்கம் விலையுமே குறையுதே’ என்ற மகிழ்ச்சி, திங்கட்கிழமையே (நவம்பர் 2) பறந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.385-உம், பவுனுக்கு ரூ.3,080-உம் ஏறிவிட்டது.
ஏறுமுகத்திற்கு என்ன காரணம்?
இன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.13,160-க்கும், பவுனுக்கு ரூ.1,05,280-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த ஏற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே.

இந்தத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், ஈரான் போரில் இதுவரை ட்ரம்பிற்கு இருந்த வலுவான அதிகாரம் சற்று குறைந்துள்ளது.
ஜனநாயகக் கட்சி ஆரம்பத்திலிருந்தே ஈரான் போருக்கு எதிராக உள்ளது. இப்போது அந்தக் கட்சிதான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இதனால், ஈரான் போரைத் தொடருவதில் ட்ரம்பிற்கு நாடாளுமன்றத்தில் சிக்கல் ஏற்படலாம். ஆனால், அவருக்கு வீட்டோ அதிகாரம் உண்டுதான்.