தத்தளிக்குது தவெக.. தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்! ஷாக்! | TVK Rift Surfaces? Ministers Arrive Separately at Alagumuthu Kone Government Event

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழா அரசுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குறிச்சியில் அவரது பிறந்த நாள் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு மத்தியில் கோஷ்டி மோதல் வெளிப்படையாக வெடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு விழாவுக்கு அமைச்சர்கள் தனித்தனியாக வந்து மரியாதை செய்த நிலையில் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 316வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருட்சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

TVK Alagumuthu Kone Kanimozhi

அழகுமுத்துக்கோன்

ஆனால் அமைச்சர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் அழகு முத்து கோன் திருவுருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, மாவட்ட ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்ரீநாத்

இதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியருடன் தனியாக வந்து அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு விழா என்று அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் ஒருமுறை, இரண்டு அமைச்சர்கள் தனித்தனியே என 3 முறை நடந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி அரசு விழா, த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நலத்திட்ட விழா

வழக்கமாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோன் வாரிசுகளை கௌரவப்படுத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த முறை எந்த விழாவும் நடைபெறவில்லை. அமைச்சர்கள் வருவது தாமதம் ஏற்பட்டதால், மற்றவர்களை சென்று மரியாதை செய்ய அனுமதிக்க காவல்துறையினருக்கும் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி

இந்நிலையில், அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றும் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் , காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தவெக அமைச்சர்கள்

மேலும், தவெக அமைச்சர்கள் முதலில் மரியாதை செலுத்திய பிறகே கனிமொழி கருணாநிதி மரியாதை செலுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சலசலப்புக்குப் பிறகு, திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி , நான் நடந்தே செல்கிறேன் என்று கூறி நடந்து சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *