தனது குழந்தை குறித்து அவதூறு பேச்சு: நடிகையும், பாஜக பிரமுகருமான அலிசா அப்துல்லா காவல் ஆணையரிடம் புகார்  – Kumudam

Spread the love

இதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்:  பிரபல கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா கடந்த 2022 ஆம் ஆண்டுபாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜகவில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக பொருப்பு வழங்கப்பட்டது. பிரசவத்திற்காக இவர் கடந்த ஒரு வருடகாலமாக அரசியல் நிகழ்வில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், யூடிப்பூர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தன்னைப்பற்றியும் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுவதாகவும்,  தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வருவதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ..

“அண்ணாமலை எனக்கு காட்பாதர் போன்றவர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.  என்று கூறியவர்,  முக்தார் உடைய இரண்டு மகள்களின் புகைப்படங்களை எடுத்து யாராவது கொச்சைப்படுத்திப் பேசினால் அவர் எப்படி உணர்வார்? அப்போது அவர் யாரிடம் சென்று பாதுகாப்பு கேட்பார்?” என்றார். மேலும், “எனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தவறாக சித்தரிக்கின்றனர். இதையெல்லாம் முன்னாள் முதலமைச்சர் கவனிக்க மாட்டாரா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

“அண்ணாமலையிடம் புகைப்படம் எடுத்து இதுபோன்று பேசச் சொல்லுங்கள்; அவர் அப்படி செய்ய மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார். “அலிஷா, அலிஷா என்று என்னை மட்டுமே குறிவைக்கிறார்கள். இது எனக்கு நல்ல விளம்பரம் என்றாலும் இது எதிர்மறையான விளம்பரம். குழந்தைகள் குறித்து யாரும் பேசக்கூடாது. எனக்கு பெற்றோர் மற்றும் கணவர் ஆதரவாக இருந்ததால் நான் உறுதியாக இருக்கிறேன். 

வேறு ஏதேனும் குடும்பமாக இருந்திருந்தால், இந்த விவகாரம் விவாகரத்து வரை சென்றிருக்கலாம். எனவே, உடனடியாக அந்த காணொளியை நீக்க வேண்டும். அவதூறு வழக்கு தொடர்வேன். தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். முக்தார் மற்றும் சூர்யா இருவரையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்று அலிசா தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *