தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ மீது 6 பிரிவுகளில் வழக்கு! – பின்னணி என்ன ?

Spread the love

அன்று ஆய்வு நடத்துவதற்கான அனுமதியைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவரின் செயல்பாடு, தொழிற்சாலையின் அன்றாடச் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கியதுடன், எங்கள் ஊழியர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பெரிய கும்பலுடன் மீண்டும் வருவதாக வெளிப்படையாக அவர் அச்சுறுத்தியிருப்பது, அது எங்கள் ஊழியர்கள் மற்றும் எங்கள் சொத்துக்களின் தொடர்ச்சியான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறோம். எனவே தொழிற்சாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அங்கு நடந்த அனைத்து சம்பவங்களும் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

புதுச்சேரி காவல்துறை

புதுச்சேரி காவல்துறை
Representational Image

மேலும் கடந்த மாதம் இதே எம்.எல்.ஏ-வின் தனிப்பட்ட உதவியாளர் எங்கள் மூத்த மனிதவள மேலாளரை பலமுறை தொடர்பு கொண்டு, தனிப்பட்ட முறையில் சில உதவிகளையும், சலுகைகளையும் கேட்டார். அதை வழங்கவில்லை என்பதற்காகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட திருபுவனை போலீஸார், எம்.எல்.ஏ சாய் ஜெ.சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, சட்டவிரோதமாக கூடுதல் 189(2), அத்துமீறி நுழைதல் 329(3), ஆபாசமாகப் பேசுதல் 229(பி), தாக்குதல் 115(2), தொழிற்சாலையின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் 351(2), ஆதரங்களுடன் புகார்(190) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *