ஈரான் கதை முடிந்தது? ஹார்முஸ் ஜலசந்தியில் இனி ஈரானால் தாக்க முடியாது? அடிமடியிலேயே அடித்த டிரம்ப் | US attacks 80 targets including air defence systems andcoastal rada sites in Iran

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதாக கூறிய அமெரிக்கா அந்த நாட்டின் முக்கியமான 80 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிற நாடுகளின் கப்பல்களை குறிவைத்து தாக்குவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த ‘அட்டாக்’கை செய்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போர், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து விட்டது. வர்த்தக கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்து வருகின்றனர்.

us-attacks-80-targets-including-air-defence-systems-andcoastal-rada-sites-in-iran

இதற்கிடையே தான் அவ்வப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.

அதுமட்டுமின்றி ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஈரானின் 80 இடங்களை குறிவைத்து அமெரிக்கா கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் என்பது ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள், கடலோர கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் கட்டமைப்புகள், ஹார்முஸ் ஜலசந்தியில் பிற நாடுகளின் கப்பல்களை கண்காணித்து தாக்குதல் நடத்த தயாராக ஈரான் புரட்சிகர காவல் படையினர் 60க்கு மேற்பட்ட சிறிய படகுகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களை தாக்க வேண்டும் என்றால் ஈரான் கடலோர ரேடார் தளங்கள், கடலோர கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் கட்டமைப்புகள் மற்றும் ஈரான் புரட்சிகர காவல் படையினரின் படகுகளை பயன்படுத்தி வந்தது. தற்போது அவற்றை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. இதன்மூலம் ஈரானின் அடிமடியிலேயே டொனால்ட் டிரம்ப் அடித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் மத்திய கட்டுப்பாட்டு மையம் (CENTCOM) கூறுகையில், ”ஈரானில் 80க்கும் அதிகமான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளோம் . வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரோடர் தளங்கள், கடலோர கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் கட்டமைப்புகள், ஹார்முஸ் ஜலசந்தியில் நிறுத்தப்பட்ட ஈரான் புரட்சிகர காவல் படையினர் 60க்கு மேற்பட்ட சிறிய படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் என்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஈரான் மீது நடத்தப்பட்ட ‘அட்டாக்’கை ஒப்பிடும்போது 4 முதல் 5 மடங்கு பெரிய தாக்குதலாகும்.

தற்போதைய தாக்குதல் என்பது ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை தொடர்ந்து குறிவைத்து ஈரானால் மீண்டும் அட்டாக் செய்யும் வலிமையை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முறையாக பின்பற்றப்படாதது அல்லது மதிக்கப்படாமல் இருக்கும் படசத்தில் அதற்கு அந்த நாட்டை பொறுப்பேற்கும் வகையில் ‘சென்ட்காம்’ படைகள் தயார் நிலையில் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த தாக்குதல் பற்றி ஈரான் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினம் ஈரானின் தெற்கு பகுதியில் சில இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்த சத்தங்கள் கேட்டதாாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் முறையாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் வார்னிங் செய்துள்ளது. இதனால் மீண்டும் ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *