“தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது”… ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு! – Kumudam

Spread the love

தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை தமிழ பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.இந்த சந்திப்பில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,பாஜக நிர்வாகி திருப்பதி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்று  இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சட்ட ஒழுங்கு,குதிரை பேரம்,அமைச்சர்களின் நடவடிக்கைகள் இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சியினரும் மற்றும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஆட்சிமுறை சரியில்லை என்று ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார் பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன்.

இது குறித்து  செய்தியாளர்களுடன் பேசுகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் அமைச்சரவையில் இடம்பெறாத விஷ்ணு ரெட்டி ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது பற்றியும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம். 

“உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், பெண் குழந்தைகளிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும், அமைச்சரவையில் இடம்பெறாத விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது பற்றியும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம்.

புதிய அரசு பொறுப்பேற்று 54 நாள்களில் 151 பாலியல் சம்பவங்கள், 85 படுகொலைகள், 80 க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. முந்தைய திமுக அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முதல்வர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.

தவெக கட்சியினரே தவறுகளில் ஈடுபடுகின்றனர். என்னிடம் பட்டியல் உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. குற்றங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை கொடுங்கள்.

குற்றங்களுக்கு நடவடிக்கை இல்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு. அமைச்சர்கள் பலரின் மீதும் குற்றச்சாட்டும் உள்ளது. இந்த அரசில் குதிரை பேரம் நடக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆய்வு செய்ய ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. சட்டத்துறை அமைச்சருக்கே சட்டம் தெரியவில்லை” என்று  கூறினார்.

மதுரையில் வைகை ஆற்றில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதற்கு தவெக அரசும் அமைச்சர்களும் நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *