தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்…… வானிலை ஆய்வு மையம் தகவல்… – Kumudam

Spread the love

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்றும் நாளையும் (15.07.2026) மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனைய தமிழகம், புதுவை,மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 ,17, 18,19 ஆகிய நான்கு நாட்கள் மேற்கு  தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை , மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை

14 ஆம் தேதி முதல் 16 தேதி வரை தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-4°  ஓரிரு இடங்களில் செல்சியஸ் வரை உயரக்கூடும்.
17.07.2026 ஆம் தேதி  தமிழகம்,புதுவை,மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஓட்டியே இருக்கக்கூடும்.

இன்றும்,  நாளை (15.07.2026) அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும். இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *