டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருதை வழங்கி கவுரவித்தார்.
ஞானபீடம் விருது பெறும் 60-வது இலக்கியவாதியான வைரமுத்து, விழாமேடையில் பேசியபோது, “சாகித்ய அகாடமி விருது, தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ எனப் பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த ஞானபீடம் விருது பெறும் பொழுது அதிக மகிழ்ச்சி கொள்கிறேன்.
எனக்கு கிடைத்த இந்த ஞானபீட விருதை தமிழ் சமூகத்துக்குப் பகிர்ந்து கொடுக்கிறேன். காகிதம் மற்றும் வாசகர்கள் இவர்கள்தான் ஓர் எழுத்தாளனுக்கு மிக முக்கியம். ஆனால் இவை இரண்டும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்தியாவில் இலக்கியத்திற்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்” என்று அவர் கூரினார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த ஞானபீட விருது ஒவ்வொரு தமிழனுக்கும் காணிக்கையாக்கப்படுகிறது. இதனைத் தமிழர்கள் தங்களின் வீட்டு விருதாகக் கருதி கொண்டாட வேண்டும்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த விருதின் பெருமையையும், தமிழின் அருமையையும் அடுத்த தலைமுறைக்குப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.