மக்கள் நலக் கூட்டணி
* 2014 தேர்தலிலும் அதே கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டு, இரண்டிலுமே தோல்வியைத் தழுவியது.
* தொடர்ந்து 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிகவிற்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக அந்தத் தேர்தலில் திருமா 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
* பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. எம்.பி-யாக திருமாவும், ரவிக்குமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
* தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

அமைச்சரவையில் விசிக
* 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது.
* திமுகவுடன் பல தேர்தல்களில் கூட்டணி வைத்த விசிக சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்து 8 இடங்களில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக கட்சி ஆதரவு கோரிய நிலையில் தனது ஆதரவை கொடுத்த விசிக இன்று அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது.
* கரடுமுரடான அரசியல் களத்தில் கால்பதித்து பல சாவால்களை எதிர்கொண்ட விசிக முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பிடித்து தனது பயணத்தைத் தொடர்கிறது.!