“திமுக ஆட்சியில் நிலவிய அதே பாதுகாப்பற்ற சூழல்” – அண்ணாமலை காட்டம்! |”The very same climate of insecurity that prevailed under DMK rule” – Annamalai lashes out!

Spread the love

மக்களின் உயிரும், பாதுகாப்பும் அரசின் முதன்மை பொறுப்பு என்பதை இந்த புதிய அரசு உணர்ந்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்

முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *