ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு என்பது ஒருவருக்கு மின்சார ஷாக் அடித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்ற பாதிப்பை உடலின் உட்புறச் செயல்பாடுகளில் ஏற்படுத்துகிறது. வெளியில் உடல் கருகியிருக்காது, ஆனால் உள்ளுக்குள் இருக்கும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் கடுமையான சேதத்தைச் சந்திக்கும்.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புடன் ஒரு நோயாளி வரும்போது, மருத்துவர்கள் காலத்தோடு போராடுகிறார்கள். அந்த 5 முதல் 10 நிமிடங்களுக்குள் வெப்பத்தைக் குறைக்கவில்லை என்றால் உயிர் பிழைப்பது கடினம்.
அதனால் ஹீட் ஸ்டோக் பாதித்தவருக்கு ரத்தக் குழாய் வழியாகச் செலுத்தப்படும் சலைன் (Saline) திரவத்தை நேரடியாக உடலுக்குள் செலுத்தி வெப்பத்தைக் குறைக்க முயல்வார்கள். இதயம் நின்ற நிலையில் வருபவர்களுக்குச் செயற்கை சுவாசமும், CPR கொடுத்தும் உயிரை மீட்கப் போராடுவார்கள்.

ORS என்பது Oral Rehydration Salts என்பதன் சுருக்கமாகும். இது நீர், உப்பு மற்றும் சர்க்கரை கலந்த ஒரு உயிர் காக்கும் கலவை. உடலில் நீர்ச்சத்து குறையும்போது, அதனை உடனடியாக ஈடுசெய்ய இது உதவுகிறது. அதில் உள்ள ஒவ்வொரு தாதுப்பொருளும் உடலின் செயல்பாட்டைச் சீராக வைக்க ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.
சோடியம்: இது உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைக்கும் மிக முக்கியமான காரணியாகும். வியர்வையாலோ அல்லது வயிற்றுப்போக்காலோ உடல் இழந்த நீர்ச்சத்தை மீண்டும் ரீடைன் செய்ய சோடியம் உதவுகிறது.