தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்! | centre-approves-6-month-extension-for-tn-cs-sai-kumar

Spread the love

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொடர்பான விதிகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்மூலம், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த டாக்டர் சாய்குமார், மேலும் ஆறு மாதங்கள் தலைமைச் செயலாளராக தொடர உள்ளார்.

டாக்டர் சாய்குமார் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் அவர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

சாய்குமார் ஐ.ஏ.எஸ்

சாய்குமார் ஐ.ஏ.எஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், தலைமைச் செயலாளராக இருந்த சாய்குமார் தொடர்ந்து பதவியில் நீடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *