“தமிழ்நாடு அரசின் சுகாதாரத் தரவுகள் நிறுத்தப்பட்டனவா?” – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்| “Have the Tamil Nadu government’s health data been discontinued?” – Minister Arunraj provides clarification

Spread the love

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அமைச்சர் அருண் ராஜ், “தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது” எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கப் பதிவைப் பகிர்ந்திருந்தார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

அதில், “தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு. TN Health Bulletin குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *