இவ்வாறு அம்மன் சந்நிதிக்கு அருகில், தென்கிழக்கு அக்னி மூலையில் கழிப்பிடம் அமைத்திருப்பது ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பாதிப்பதுடன், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் மனதிலும் வேதனையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையும், திருக்கோயில் நிர்வாகமும் உடனடியாகக் கவனம் செலுத்தி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் இடம் மற்றும் கட்டுமானம் குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அதோடு, சம்பந்தப்பட்ட திருக்கோயிலின் ஆகம மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளின்படி உரிய வல்லுநர்களின் கருத்தைப் பெற வேண்டும். கட்டுமானத்திற்கான நிர்வாக அனுமதி, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் தொடர்புடைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதனைத்தொடர்ந்து, விதிமீறல் அல்லது முறையற்ற கட்டுமானம் உறுதி செய்யப்பட்டால், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அதனை அகற்றவோ அல்லது தகுந்த மாற்று நடவடிக்கை எடுக்கவோ வேண்டும். அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மையையும், ஆகம மரபுகளையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பது அறநிலையத்துறையின் முக்கியப் பொறுப்பாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் காலதாமதமின்றி உரிய விசாரணை நடத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.