தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன “ஸ்பீச்’சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் புதுகாட்சிகள்.
அந்தப் பேச்சில் விஜய் குறிப்பிட்ட முக்கியமான ஒன்று, “ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது.
எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்” என்பதுதான்.

குறிப்பிட்ட ஒரு விவகாரத்தைப் பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து, அதன் வெளிப்படையான அறிக்கை அரசாங்கம் வெளியிடுவதே ‘வெள்ளை அறிக்கை’.
இந்தியாவில் நடந்த 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியால், இன்னும் பல பிரிட்டிஷ் நடைமுறைகள் இந்தியாவில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தான் இதுவும்.