தமிழ்நாட்டின் சில திரையரங்கங்களில் தனுஷின் 'O.M' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் – என்ன பிரச்னை?

Spread the love

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. சந்தனக் கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இதில் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 20) இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஓம் படத்தில்...
ஓம் படத்தில்…

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனி திரையரங்குகளில் ‘ஓம்’ திரைப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வருவாய் பங்கீடு பிரச்னையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் விநியோக உரிமையை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளைப் பொறுத்தவரை, விநியோக நிறுவனத்திற்கு 80 சதவீதமும், திரையரங்குகளுக்கு 20 சதவீதமும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தனி திரையரங்குகளுக்கு விநியோக நிறுவனம் சொன்ன விகிதம் ஒத்துவராததால், தனி திரையரங்கு உரிமையாளர்கள், ‘ஓம்’ திரைப்படத்தைத் திரையிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படம் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலைத் தீர்க்க, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோக நிறுவனத்திற்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *