50 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு: மோடி அமைச்சர்களுக்கு வைத்த அடுத்த இலக்கு!|‘Don’t Just Spend’: Modi’s Message on India’s Savings Culture

Spread the love

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மணிலா சென்று திரும்பிய இந்தியப் பிரதமர் மோடி, நேற்று (நவம்பர் 18) உடனடியாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசுச் செயலாளர்களுடன் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் உலக வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியா சுமார் 50 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும்,

உலக அளவில் வறுமையை மிக வேகமாகக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் பெருமையாகப் பேசியிருக்கிறார்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதேபோன்று அடுத்து இலக்காக போதைப்பொருள் பழக்க ஒழிப்பைக் கொண்டுவந்து, கூட்டு முயற்சிகள் மூலம் ஒழிக்க முடியும் என்று மோடி நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்.

மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிடம் பிரதமர் சொல்லியிருக்கிறார். “இந்தியக் கலாசாரம் என்பது ‘உண்போம், குடிப்போம், கொண்டாடுவோம்’ என்பதல்ல.

வறுமையிலிருந்து மீண்டவர்கள், கட்டுப்பாடற்ற செலவுகளால் மீண்டும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது. இதனால், சேமிப்புப் பழக்கத்தை அதிகம் ஊக்குவிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *