`தமிழ்நாட்டின் புதிய டிஜிபி – மகேஷ்குமார் அகர்வால்’ – தமிழ்நாடு அரசு நியமனம்!

Spread the love

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (Union Public Service Commission) தேர்வு செய்து அந்தப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்தப் பட்டியலில் தங்களுக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவரை இந்தப் பதவியில் நியமிக்கும். இந்த நடைமுறையின்படி கடந்த தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். அவரின் ஓய்வுக்குப் பிறகு புதிய டி.ஜி.பி-யை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நிரந்தர டி.ஜி.பி-யை தேர்வு செய்வதில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் லாபி செய்ததால் வெங்கட்ராமன் தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பியாக இருந்து வந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஐ.பி.எஸ்

டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஐ.பி.எஸ்

இந்தச் சூழலில்தான் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பி-யாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு சந்தீப்ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க, புதிய ஆட்சியை அமைத்தது. இருப்பினும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக சந்தீப்ராய் ரத்தோர், அந்தப் பதவியிலிருந்து வருகிறார். அவர் தலைமையில் முதல்வர் விஜய்க்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியை தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி கூட்டம் டெல்லியில் (26.5.2026) நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போதைய சீனியரிட்டி அடிப்படையில் சீனியர் டி.ஜி.பி-க்கள் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று பேரில் ஒருவரை டி.ஜி.பியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *