தமிழ்நாட்டில் பிளான் செய்த அதே திட்டத்தை, ஆந்திராவிற்கு எடுத்துச் செல்லும் போது, கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் கொண்ட மெகா கப்பல் கட்டும் தளமாக விரிவு செய்துள்ளது என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பக்கம் ஒரு திட்டம் செல்வது தமிழ்நாடு தொழிற்துறைக்கு நல்லதல்ல என்கிற குரல்கள் எழுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு தொழிற்துறையின் சில முக்கிய அதிகாரிகளிடம் பேசினோம்…
“மத்திய கப்பல் அமைச்சகம் வழிகாட்டுதல் படி, இந்தியாவில் கப்பல் கட்டும் தளத்திற்கு 2,000 ஏக்கர் கட்டாயம் தேவை. ஆனால், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் கேட்பது என்னவோ 600 ஏக்கர் மட்டுமே.

இன்னொரு பக்கம், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் மசகான் நிறுவனம் இணைந்து ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால், 2,000 ஏக்கர் பிரச்னை வராது. ஆனால், இரு நிறுவனங்களுக்கு அது செட் ஆகவில்லை.
அதனால், வேறு சில நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். மசகான் நிறுவனம் கேட்கிற மாதிரியான இடத்தையும் பார்த்து வருகிறது. இரண்டும் கைகூடினால், தமிழ்நாட்டில் மசகான் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைப்பதில் பிரச்னை ஏற்படாது”. என்கிறார்கள்.
இதனிடையே தமிழக தொழில்த்துறை அமைச்சர் கீர்த்தனா, இன்று தன் தென் கொரியா பயணத்தில் ஹுண்டாய் நிறுவன முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.