தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை: எந்தெந்தக் கோயில்? | முழுப் பட்டியல்! | A ban on carrying mobile phones has been imposed in 52 temples in Tamil Nadu.

Spread the love

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு நேற்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “ஏற்கெனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

ஏற்கெனவே பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்குத் தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கியத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், வீடியோ/ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்கவும் இக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *