தரமான கற்பித்தல்; தனிப்பட்ட வழிகாட்டுதல் – சாதனைகள் படைக்கும் வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளி!

Spread the love

பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் கூறுகையில், “கல்வி கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், தன்னம்பிக்கை, சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கை நோக்கிய பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மாணவர்கள் தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர்” என்றார்.

உதவித் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கூறுகையில், “ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கியே மேல்நிலைப் பள்ளிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. தரமான கற்பித்தலும், தனிப்பட்ட வழிகாட்டுதலும் மாணவர்களின் வெற்றிக்குக் காரணமாக உள்ளன” என்றார்.

அரசுப் பள்ளியில் இருந்து மாநில அளவில் முதலிடம்

இந்த அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தேவதர்ஷினி, 2026-ம் ஆண்டு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வில், 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், சேலம் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். மேலும், 199 கட்-ஆஃப் (Cut-off) மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழுமையாக அரசுப் பள்ளியிலேயே கல்வி பயின்ற தேவதர்ஷினி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பயிற்சியும், பெற்றோரின் ஊக்கமும் தனது வெற்றிக்கான முக்கியக் காரணம் எனக் கூறுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *