அப்படி வீடியோ எடுத்த வீடுகளுக்கு நால்வரும் இரவில் காரில் சென்று திருடியுள்ளனர். இவர்களைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
தற்போது அவர்களிடமிருந்து 12 கிராம் தங்க நகை, ரூ 40 ஆயிரம் ரொக்கம், டி.வி, சிலிண்டருடன் அடுப்புகள் உள்ளிட்ட சில வீட்டு உபயோகப் பொருட்களை கைப்பற்றியுள்ளோம். ரிமாண்ட் செய்யப்பட்டுள்ள இவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
கல்லூரிக்கு சென்று கலகலப்பாக இருக்க வேண்டிய வயதில், காவல் வாகனத்தில் கலக்கத்துடன் சிறைக்கு சென்றவர்களை பார்த்து ஆத்திரம் கொள்வதா? அனுதாபப்படுவதா? என்று அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டார்கள்.