செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. குறிப்பாக, வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்காரகப் பிரீதி செய்துகொள்வது நல்லது.
உலக சுகபோகங்களுக்கு அதிபதி சுக்ரன். அவரின் நிலையின் காரணமாக ஜாதகத்தில் கல்யாண தோஷ பாதிப்புகள் இருக்குமாயின், வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசிதேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம்.
நவகிரகங்களில் புதனின் நிலையானது ஜாதகத்தில் கல்யாணத் தடைகளுக்குக் காரணமாக இருந்தால், மகாவிஷ்ணு வழிபட்டுப் பலன் பெறலாம். புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.
கல்யாணத் தடைக்கு சர்ப்ப கிரகங் களும் காரணம் ஆகலாம். அப்படியான ஜாதகர்கள், ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது.
ஆனால் தோஷம் எதுவாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் ஹோம வழிபாடு ஒன்று உண்டு என்றால் அதுதான் சுயம்வர கலாபார்வதி ஹோமம். அன்னை பார்வதி ஈசனை அடைய மேற்கொண்ட வழிபாடு இது என்பார்கள். இதற்கான மந்திரங்களை பிரம்ம தேவரே உருவாக்கிக்கொடுத்தார் என்பது ஐதிகம். அதன்படி இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்தாலே கிரகதோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
வாசகர்கள் கவனத்துக்கு
நாள்: 1.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, வேலூர்.
🔸 திருமணப் பிரார்த்தனை யாருக்காகச் செய்யப்படுகிறதோ, அவர்கள் நேரில் கலந்துகொள்வது மிகவும் விசேஷமாகும்.
🔸 முன்பதிவு செய்தவர்கள் ஹோமம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, கோயிலுக்கு வருகை தர வேண்டும்.
🔸 ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்பவர்களுக்கு, ஜலகண்டேஸ்வரர் தர்மஸ்தாபனம் சார்பில் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சுயம்வரகலா பார்வதி யந்திரப் படம் வழங்கப்படும்.
📞 மேலும் விவரங்களுக்கு: 044-6680 2980 / 044-6680 2907 / 96770 69112
ஶ்ரீசுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்