மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பெயர்களை முறைகேடாகப் பயன்படுத்தி 2.88 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சோபியா என்பவர் சமீபத்தில் தொப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “எங்கள் ஊரிலுள்ள 16 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 273 பேரும் சேமிப்பு பணத்தை முறையாக செலுத்தி வந்தோம். வங்கிகளில் பெற்ற கடனையும் முறையாக செலுத்தி வந்தோம்.
இந்த நிலையில், 6 மாதத்திற்கு முன்பு “வாங்கிய கடனுக்கான தொகையை செலுத்தவில்லை, உடனே செலுத்த வேண்டும்’ என்று தருமபுரி, பாளையம்புதூர் வங்கிகளிலிருந்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.
முறையாக செலுத்திய எங்களுக்கு நோட்டீஸா என்று அதிர்ச்சியடைந்த நாங்கள், இது குறித்து விசாரித்தபோது,