தருமபுரி: 23 வயது மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை; 17 வயது பாலிடெக்னிக் மாணவன் கைது | Dharmapuri: 17-year-old polytechnic student arrested for sexually harassing a 23-year-old medical student.

Spread the love

மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது பாலிடெக்னிக் மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

வெளி மாவட்டம் ஒன்றில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி விடுமுறைக்காக பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திலுள்ள தன் ஊருக்கு வந்திருக்கிறார்.

வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் டி.வி பார்த்தபடியே மதிய நேரத்தில் உறங்கியுள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக்கில் பயிலும் 17 வயது மாணவர், மாணவி தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அங்கு படுத்திருந்த மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயற்சிக்க விழித்துக்கொண்ட மாணவி சத்தம் போட்டு அலறவும் மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க, வழக்குப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் அந்த மாணவனைக் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *