அதனால் எந்த பயனும் இல்லை, நீட் வேண்டாம் என்பது தான் நமது நிலைப்பாடு. போராட்டத்தில் நிறைய கோரிக்கைகள் உள்ளது. டெல்லியில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும். நம்முடைய நிலைப்பாடு நீட் வேண்டாம்… தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் நீட் தேர்வை மறுசீரமைப்பு செய்யவும், ஒரு சிலர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் போராடுகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நம்முடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல… நம்முடைய கோரிக்கை நீட் வேண்டாம். அவர் பதவி விலகினாலும் நீட் தொடரும்.
நீட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் திமுக தலைவர்கள் பங்கேற்று நிறைய பேசி உள்ளார்கள், இதை பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் இதை ஐந்து வருடத்தில் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள் தவறான நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து.