தர்மேந்திர பிரதான் விவகாரம்: ஜே.பி.நட்டாவுடன் மீண்டும் நாளை CJP பேச்சுவார்த்தை|Big Breakthrough? Centre Accepts Two CJP Demands

Spread the love

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.

இன்று மதியம் காக்ரோச் ஜனதா கட்சியுடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக செயற்பாட்டாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா கலந்துகொண்டனர்.

'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்கள்

“கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ இளைஞர்கள்

இந்தப் பேச்சுவார்த்தையில் காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் வைத்த…

> அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது,

> சமீபத்திய தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டன.

ஆனால், தர்மேந்திர பிரதான் பதவி விலகல் மட்டும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால், மத்திய அரசு, காக்ரோச் ஜனதா கட்சி இடையே நாளையும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *