தலைவரின் JAILER 2 ஓடிடியில் ரிலீஸ் ! UNCUT VERSION வெளியாகிறதா ? எகிறும் எதிர்பார்ப்பு ! – Kumudam

Spread the love

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.840 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்குகளில் நான்காவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

நவம்பர் 12-ல் OTT ரிலீஸ்?

‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 12-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும்  என அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உறுதிப்படுத்தாமல் இருந்த  நிலையில், படத்தின் ஓடிடி வெர்ஷனின் அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், புது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

30 நிமிட கூடுதல் காட்சிகள்.. UNCUT VERSION வருமா?

‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஓடிடியில் சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் UNCUT VERSION ஆக வெளியாகலாம் என வெளியான தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, திரையரங்குகளில் இடம்பெறாத சந்தானம், மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரின் சில காட்சிகள் ஓடிடி வெர்ஷனில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், திரையரங்குகளில் ரசிகர்கள் காணாத பல காட்சிகளை ஓடிடியில் ரசிக்க முடியும்.

சந்தானம் முதல் மோகன்லால் வரை.. நீக்கப்பட்ட காட்சிகளால் எழுந்த சர்ச்சை!

‘ஜெயிலர் 2’ படத்தில் பல முக்கிய நடிகர்கள் கேமியோ ரோலில் நடிப்பதாக படம் வெளியாவதற்கு முன்பே தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், படத்தின் நீளம் காரணமாக சில காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, சந்தானத்தின் காட்சிகள் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல், விஜய் சேதுபதியின் காட்சிகளும் குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

முதல் பாகத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மோகன்லாலின் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் குறைவான நேரமே இடம்பெற்றிருந்தது மலையாள ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்ட பதிவு இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திரையரங்கில் பார்த்த அதே படமா? OTT-யில் புதிய விருந்தா?

இதுவரை வெளியான தகவல்கள் உண்மையாகி, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கூடுதல் காட்சிகளுடன் UNCUT VERSION ஆக வெளியாகும் பட்சத்தில், ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய சர்ப்ரைஸாகவும் விருந்தாகவும் அமையும்.

திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சிகள், முக்கிய நடிகர்களின் கூடுதல் பகுதிகள் என பல எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே உருவாகியுள்ளன. குறிப்பாக சந்தானம், மோகன்லால், விஜய் சேதுபதி ஆகியோரின் காட்சிகளை முழுமையாக பார்க்க முடியுமா என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

ஆனால், கூடுதல் காட்சிகளுடன் கூடிய UNCUT VERSION வெளியாகுமா என்பது குறித்து படக்குழுவோ அல்லது அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

திரையரங்குகளில் பார்த்த ‘ஜெயிலர் 2’ படத்தையே OTT-யிலும் பார்க்கப்போகிறோமா? அல்லது ரசிகர்கள் தவறவிட்ட காட்சிகளுடன் புதிய அனுபவத்தை நெல்சன் வழங்கப்போகிறாரா? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *