“தவெகவுக்கு ஆதரவு என்பது வாசனின் முடிவு; நான் அரசை விமர்சிப்பது வேறு!” – சொல்கிறார் தமிழருவி மணியன்

Spread the love

இணைப்புக்குப் பிறகு இரு கட்சிகள் ஒரே கட்சி என்றாகிவிட்ட பிறகு அந்தக் கட்சியின் தலைவராக வாசன் எடுக்கும் முடிவே இறுதியானது. கடந்த தேர்தலில் அந்தக் கட்சி அதிமுக – பாஜக அணியில் இருந்ததையே அவர்களில் பலர் விரும்பவில்லை.

எனவே தற்போது நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்தைக் கேட்டு அதனடிப்படையில் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியொரு முடிவை எடுத்ததற்கு முன் என்னையும் வந்து சந்தித்தார் வாசன். ‘உங்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கிறீர்கள், இதில் என்ன இருக்கிறது’ எனச் சொல்லி விட்டேன்.

அதே நேரம் தமிழக வெற்றிக் கழக அரசு, எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு குறித்து மாநிலத்தின் குடிமகனாக எனக்கும் கருத்திருக்குமில்லையா, அதை நான் பேசினேன்.

தீவிர அரசியல் வேண்டாம் என நான் எடுத்த முடிவு இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. இருந்தபோதும் சூழ்நிலைக்கேற்ப சில நேரங்களில் என்னுடைய கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

மற்ற நேரங்களில் இலக்கியம், அந்தக் காலத்து நல்ல திரைப்படங்களை விமர்சனம் செய்வது, ஆன்மிகம் என என்னுடைய மீதிக் காலத்தை நகர்த்தலாமென நினைக்கிறேன்” என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *