தவெக அமைச்சரவை: இலாக்கா ஒதுக்கீடு; செங்கோட்டையன், ஆனந்த்துக்கு என்ன துறை? – முழு விவரம்! | With the expansion of the Cabinet, portfolios have been allocated to the ministers.

Spread the love

தற்போது இறுதி செய்யப்பட்டிருக்கும் அமைச்சர்களும், அவர்களின் இலாக்காக்களும் முழு விவரம்:

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்: முதலமைச்சர்

இலாக்கா – பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்றை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறக் கடன் சுமை, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்.

அமைச்சர் என். ஆனந்த்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்

இலாக்கா – ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், பாசனம், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

அமைச்சர் ஆர். நிர்மல்குமார்: ஆற்றல், வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர்

இலாக்கா – மின்சாரம் மற்றும் மரபுசாரா ஆற்றல் மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்).

அமைச்சர் செங்கோட்டயன்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்.

இலாக்கா – வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதான், கிராமதான் மற்றும் சட்டமன்றம்.

அமைச்சர் ஸ்ரீநாத்: மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர்

இலாகா – மீன்வளம், மீன்வள மேம்பாட்டுக் கழகம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *