தவெக அமைச்சரவை: ராஜ் மோகன் அமைச்சராக ‘டிக்’ அடிக்க காரணம் என்ன? | TVK Cabinet: What is the reason behind ‘ticking’ Raj Mohan as a Minister?

Spread the love

தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். விஜய்யோடு சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றிருக்கின்றனர்.

அதில் முக்கியமானவர் தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ் மோகன். அவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் எப்படி ராஜ்மோகனின் பெயரை டிக் அடித்தார்?

ஊடகவியலாளரான ராஜ் மோகன் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பே தவெகவுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிவிட்டார். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாக சேலத்தில் ஒரு பயிற்சி பட்டறை தவெக நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக ராஜ் மோகன் அழைக்கப்பட்டிருந்தார். அந்தச் சமயத்தில் ராஜ் மோகனின் தந்தை உடல்நிலை சரியாக இல்லாமல் மருத்துவமனையில் இருந்தார்.

ராஜ் மோகன் - தவெக

ராஜ் மோகன் – தவெக

தந்தை சீரியஸாக இருந்தபோதும் ராஜ் மோகன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிவிட்டு சென்றதில் விஜய் பெர்சனலாக இம்ப்ரஸ் ஆகிவிட்டார். விக்கிரவாண்டி மாநாட்டு இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜ் மோகனின் தந்தை காலமாகிவிட்டார்.

அந்தச் சமயத்தில் விஜய்யே தனக்கு நெருக்கமான சிலரை ராஜ் மோகனின் வீட்டுக்கு அனுப்பி தேவையான உதவிகளையெல்லாம் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

ஆரம்பக்கட்டத்திலேயே ஈடுபாட்டோடு செயல்பட்டதால்தான் கட்சியில் இணைந்த உடனேயே கொள்கைப் பரப்புச் செயலாளர் எனும் பொறுப்பையும் விஜய் கொடுத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *