தவெக அரசின் இலவச மின்சாரத் திட்டத்தில் குழப்பம்: முற்றுப்புள்ளி வைத்த அரசாணை! | Confusion over the TVK Government’s Free Electricity Scheme: Government Order Puts an End to It!

Spread the love

இந்நிலையில், இது தொடர்பாக அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனவும், 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு பழைய நடைமுறையான 100 யூனிட் மின்சாரம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? – தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.

மின்சாரம் (Representational Image)

மின்சாரம் (Representational Image)

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *