விசிக-வில் சர்ச்சை… தவெக-வில் வெற்றி! – வில்லிவாக்கத்தில் முத்திரை பதித்து அமைச்சரான ஆதவ் அர்ஜுனா | Controversy in the VCK… Victory for the TVK! – Aadhav Arjuna

Spread the love

அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தபோது, “40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?” என்று அவர் எழுப்பிய கேள்வி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவில், “பிறப்பால் ஒருவர் முதல்வர் ஆகக் கூடாது; மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என திமுக-வை மறைமுகமாக விமர்சித்ததால், விசிக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

நிர்மல்குமார் தவெக-வில் இணைந்த அதே நாளில், இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆதவ் அர்ஜுனா - விஜய் தவெக

ஆதவ் அர்ஜுனா – விஜய் தவெக

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகனை 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா களத்தில் போட்ட உழைப்பும், விஜய்யின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *