தவெக ஆக்ஷனால்…..வழக்குகளால் திணறும் செந்தில்பாலாஜி! – Kumudam

Spread the love

தேர்தலுக்கு முன்பிருந்தே செந்தில்பாலாஜி மீது ஸ்பெஷல் கவனம் செலுத்திவரும் விஜய், ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் தொடர் வழக்குகள் மூலம் அவரை விரட்டிவருகிறார். அதற்கேற்ப முதல்வர் விஜய் கொடுத்த டாஸ்மாக் டாஸ்க்கை நிறைவேற்றும் வகையில், சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அஃபிடவிட்டை ஆதாரமாக வைத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூலை 28ம் தேதி வழக்குப் பதிந்தது.

இதன் எஃப்.ஐ.ஆரில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 857 பார்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. இதில், ஒரே வங்கியில் தொடர்ச்சியான வரிசை எண்களுடன் டிமாண்ட் டிராஃப்ட்கள் எடுத்து கூட்டுச்சதி நடந்துள்ளதற்கான எவிடென்ஸ் மிக முக்கியமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 32.80 கோடி முறைகேடு நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு டிரான்ஸ்ஃபோர்ட் ஒப்பந்தங்களில் முறைகேடு, பார் ஒதுக்கீட்டில் முறைகேடு, மதுபான ஆலைகளுடன் இணைந்து போலி நிதி பரிவர்த்தனை என குற்றச்சாட்டுகள் அணிவகுக்கின்றன.

மேலும் எஃப்.ஐ.ஆரில் ஏழாவது பெயராக சேர்க்கப்பட்டுள்ள மூலனூர் சக்தி மெஸ் கார்த்திக் தலைமையில் ‘கரூர் கம்பெனி செயல்பட்டதாகவும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்கள் பரிந்துரைத்தவர்களுக்கே பார் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது. பார் உரிமையாளர்களை மிரட்டி பார்ட்டி ஃபண்ட் வாங்கிய குற்றச்சாட்டும் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குதிரைபேர வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த கார்த்திக், தற்போது டாஸ்மாக் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். கார்த்திக்கை அப்ரூவராக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ள நிலையில், அவர் வாயைத் திறந்தால், செந்தில்பாலாஜியின் ஒட்டுமொத்த சம்ராஜ்யமும் சரியும்” என விரிவாக சொல்லி முடித்தார்.

செந்தில்பாலாஜியை துரத்தும் வழக்குகள் தொடர்பாக, த.வெ.க. தேசிய செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான மசத்தியகுமார் கூறும்போது “டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் முன்ஜாமின் வழங்கவில்லை. விதித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை எப்போது அழைத்தாலும், விசாரணைக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பெற்று அவர் கைது செய்யப்படுவார்.

அதோடு, குதிரைபேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி காலை, மாலை ஆஜராக வேண்டும். மின்துறை அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் தொடர்பாக செந்தில்பாலாஜி மீதான சி.பி.ஐ. வழக்கு நிலுவையில் உள்ளது. இன்கம்டாக்ஸ் ரெய்டு வழக்கும், தாக்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது. கரூர் நெரிசல் வழக்கிலும் சி.பி.ஐ. அவரை விசாரித்துள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *